குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்
‘குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்று வி.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பேசினார்.
வேலூர்,
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் குழந்தைகள் மீதான அனைத்து வகை குற்றங்களுக்கும் எதிரான போர் எனும் பாரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை மூலம் வழிநெடுகிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த யாத்திரையின் ஒரு நிகழ்வாக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ஆனந் ஏ.சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது:-
நானும் என்ஜினீயரிங் மாணவர் தான். கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையை தேர்வு செய்து படித்தேன். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடப்பதை செய்தித்தாள்களின் வழியாக நாம் பார்க்கிறோம்.
இந்தியாவில் அதிக அளவில் குழந்தைகள் மீது குற்ற செயல்கள் நடக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 2 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 2 நிமிடத்திற்கு 4 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். நான், குழந்தைகள் மீதான குற்ற செயல்களை வேடிக்கை பார்க்க மாட்டேன். அதை தடுக்கும் வகையில் எனது போராட்டம் தொடரும்.
குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டில் நடக்கிறது. இதனால் அந்த குழந்தைகளின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும். குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிரான இந்த போர் உங்களுடையது. என் ஒருவனால் மட்டும் இதை தடுக்க முடியாது. மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். முதலில் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் மீதான குற்ற செயல்களை தடுக்க நாம் சபதம் ஏற்போம். குழந்தைகள் நம் நாட்டின் தேசிய சொத்தாகும். சமூக வலைத்தளங்களில் நீங்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
எனது இந்த யாத்திரையை பிரதமர் முதல் நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரிக்கின்றனர். அந்த பலத்தால் எனது பயணம் வலிமையானதாக மாறி உள்ளது. நம் தேசத்தின் குழந்தைகள் உங்களை நம்பி உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வரை எனது போர் பயணம் தொடரும்.
குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை போன்ற வன்கொடுமை வழக்குகளில் இந்தியாவில் 4 சதவீத வழக்குகளுக்கு மட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. 6 சதவீத வழக்குகளில் பலர் விடுதலை அடைந்துள்ளனர். 90 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான குற்ற செயல்களை தடுக்கும் விதமாக உறுதி மொழி ஏற்கப்பட்டது.