‘நீட்’ தேர்விற்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மாணவ, மாணவிகளும் பங்கேற்பு
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலையில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை,
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் முழுவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.சிவானந்தம்,
காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார், வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் முத்தையன், இந்தியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பீர்முகமது, இந்தியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமதுஅலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நசீர்அகமத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) அம்பேத்வளவன், (வடக்கு) செல்வம், (கிழக்கு) பகலவன், திராவிட கழக மாவட்ட தலைவர் பட்டாபிராமன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
முதல் குரல்
ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில் பணிபுரிய வரும் பிற மாநில டாக்டர்களால் நமக்கு எவ்வாறு மருத்துவம் அளிக்க முடியும்.
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றார். அவர் கூறியது போல் நடந்தால் அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அனிதாவின் இறப்புக்கு பொறுப்பேற்று தமிழக முதல் -அமைச்சர் பதவி விலக வேண்டும். ‘நீட்’ தேர்விற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், தெற்கு மாவட்ட கழக நிர்வாகி ஸ்ரீதரன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, பிற கட்சி நிர்வாகிகள், கம்பன் பாலிடெக்னிக் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.