பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
கிருஷ்ணகிரி,
சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
ஊத்தங்கரையில் 4 ரோடு அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சின்னபாப்பா, சின்னதம்பி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், சக்திவேல், விஜயகுமார், சத்ய நாராயணமூர்த்தி, முருகேசன், வேடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.
மத்தூர், காவேரிப்பட்டணம்
மத்தூர் பஸ் நிலையத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சக்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் விநாயகமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் நடராஜன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் அரவிந்தன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணத்தில் நகர செயலாளர் வாசுதேவன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், மாவட்ட அக்ரோ தலைவர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வேலுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.