விழுப்புரம், திண்டிவனத்தில் நடந்தது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கக்கோரி விழுப்புரம், திண்டிவனத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-13 23:15 GMT

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், ராதாமணி, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் ஜெயச்சந்திரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், ஜெயகணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, தனபால், பாமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ரஷீத்கான், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன், விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், வெங்கடேசன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் மாணவ– மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அனைத்து கட்சிகள் சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீதாபதி சொக்கலிங்கம்(திண்டிவனம்), டாக்டர் மாசிலாமணி(மயிலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ரமணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் சையத்கலீல், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாரூக், திராவிடர் மண்டல செயலாளர் கா.மு.தாஸ் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டிவனம் நகர செயலாளர் கபிலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்