சசிகலா நியமனம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: மானாமதுரையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது என்றும், சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து மானாமதுரை சட்டமன்ற அலுவலகம் முன்பு

Update: 2017-09-13 22:45 GMT

மானாமதுரை,

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது என்றும், சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதனை கண்டித்து மானாமதுரை சட்டமன்ற அலுவலகம் முன்பு டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி கழக செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர்கள் விஜயகுமார், அசோக், ஜெ.பேரவை செயலாளர் நமச்சிவாயம், முன்னாள் கவுன்சிலர் சரவணன், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது உருவபொம்மைகளை எரிக்கும் சம்பவம் நடைபெறுமா என்ற முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் அண்ணா சிலை பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆனால் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்