‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி

‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி

Update: 2017-09-12 22:45 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. மாணவி அனிதாவின் மறைவுக்கு காரணமான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் காயத்திரி தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போராட்டத்திற்கு பிறகு அவர்கள் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றனர்.

இதேபோல் ‘நீட்’ தேர்வை எதிர்த்து நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டத்தையும் நடத்தினர். அப்போது அங்கு வந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தி.மு.க. சார்பில் இன்று (புதன்கிழமை) நாமக்கல்லில் நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி துண்டு பிரசுரம் வழங்கினார்.

மேலும் செய்திகள்