திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பாண்டூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆபேல். இவரது மனைவி பவானி (வயது 27). நேற்று முன்தினம் பவானி தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சைமன் (40), அவரது சகோதரர் ராஜா(45) ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பவானியை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து பவானி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து சைமன், ராஜா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.