தனியார் பள்ளி பஸ்களை மறித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குடும்பத்துடன் போராட்டம்

வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

Update: 2017-09-12 23:15 GMT

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இவரது மகனும் மகளும் விஸ்வநத்தத்தில் உள்ள தனியார்பள்ளியில் படித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் அந்த பள்ளியை சேர்ந்த 2 பஸ்கள் நேற்று காலை அந்த ஊரில் உள்ள மாணவ–மாணவிகளை அழைத்துச்செல்ல பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அப்போது சண்முகசுந்தரம் தனது மனைவி கற்பகம் மற்றும் மகன், மகளுடன் வந்து அந்த பஸ்சின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

 இதனை தொடர்ந்து சண்முகசுந்தரத்தையும் அவரது மனைவி கற்பகத்தையும் வெம்பக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் கைது செய்தார். பஸ் டிரைவர் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்