டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
குருந்தன்கோட்டில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
அழகியமண்டபம்,
இரணியல் அருகே குருந்தன்கோட்டில் சரல் செல்லும் சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஜூலை மாதம் அவை மூடப்பட்டன. அவற்றில் ஒரு கடையில் இருந்த பொருட்கள் அகற்றப்படாமல் இருந்தது. நேற்றுமுன்தினம் கடையில் இருந்த பொருட்களை எடுப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். அத்துடன், கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்கள் பலர் கடை முன்பு கூடினர். அவர்கள் கடையை திறக்க கூடாது என கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் போராட்டத்திற்கு சில ஆண்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். ஆனால், பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
நேற்று 2–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலையில் பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், போலீசாரின் சமரச பேச்சை பெண்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள் பூட்டப்பட்ட கடைக்குள் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அங்கிருந்து அகற்றினால்தான் தாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதியாக கூறினர்.
இதைதொடர்ந்து மாலை 3.15 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் இருந்த மதுபானங்களை எடுத்து சென்றனர். அதன்பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.