‘நீட்’ தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

‘நீட்’ தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Update: 2017-09-12 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில், நேற்று ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். அவர்கள் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கலை கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தக்கூடாது என கூறினர். இதையடுத்து அந்த மாணவர்கள் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அலுவலகம் முன்பு அமர்ந்து, நீட் தேர்வை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்