கொலை, வழிப்பறி வழக்கில் கைதான 2 ரவுடிகள் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 ரவுடிகள் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு பிரபல ரவுடிகள் தாசநாயக்கன்பட்டி மந்தைவெளியை சேர்ந்த முரளி என்ற முரளிதரன் மற்றும் கார்த்திக், கோழிபாஸ்கர், தங்கராஜ், பாபு, ராஜா, செம்மட்டையன், நாகராஜ், வளத்திகுமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர்கள், கடந்த ஜூன்மாதம் 23-ந் தேதி கொலையுண்ட சண்முகத்தின் அண்ணனான காய்கறி வியாபாரம் செய்து வரும் ஜெயராமனை வழிமறித்து, கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கில் முரளிதரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஜூலை மாதம் ரியல் எஸ்டேட் அதிபர் திருப்பதியை முரளிதரன் மற்றும் சிலர் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டி தாக்கிய வழக்கு மல்லூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
மற்றொரு ரவுடி
சேலம் பொடரன்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். பிரபல ரவுடியான இவர், கடந்த ஏப்ரல் மாதம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் நடந்து சென்ற முருகன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும், கடந்த ஆகஸ்டு மாதம் மணியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம், 2 செல்போன்களை பறித்து சென்றதாகவும் அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவுடிகள் முரளிதரன், பிரகாஷ் ஆகியோர் மீது கொலை, வழிப்பறி என தொடர் குற்ற வழக்குகள் உள்ளதால் இருவரையும் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் ஓராண்டு சிறையில் அடைக்க அன்னதானப்பட்டி போலீசார் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதை அவர், மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாருக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்று அவர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவர்களில் முரளிதரன் 4-வது முறையாகவும், பிரகாஷ் 3-வது முறையாகவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.