வீடு புகுந்து காங்கிரஸ் நிர்வாகியை கொல்ல முயன்ற 2 வாலிபர்கள் கைது
திருபுவனை அருகே காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து கொலை செய்ய முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை,
திருபுவனை அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 40), திருபுவனை வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துவேல் வீட்டில் இருந்தபோது 2 வாலிபர்கள் அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.
அவர்களிடமிருந்து முத்துவேல் தப்பி ஓடியபோதுவிடாமல் துரத்தி சென்று கொலை செய்ய முயன்றனர். அதனை தடுக்க முயன்ற அவருடைய சகோதரியின் மகன் சந்தோசையும் அந்த வாலிபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முத்துவேல், சந்தோஷ் ஆகியோர் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலை கண்டித்து முத்துவேலின் உறவினர்கள் மற்றும் குச்சிப்பாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கடலூர்-புதுச்சேரி ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். அதனால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர்.
இந்த நிலையில் முத்துவேலுவை கொலை செய்ய முயன்றதை கண்டித்து திருபுவனையில் நேற்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் முத்துவேலை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவருடைய ஆதரவாளர்கள் நேற்று காலை 9 மணி அளவில் விழுப்புரம்-புதுச்சேரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் அவதிக்கு ஆளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முத்துவேலை கொலை செய்ய முயன்றவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் குற்றவாளிகளை மாலைக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து காலை 10-30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மதகடிப்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த கதிர் என்ற கதிரவன் (23), கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த கிருபாகரன் (23) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் 2 பேரும்தான் முத்துவேலை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் இருவரும் எதற்காக முத்துவேலை கொலை செய்ய முயன்றனர் என்பது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.