தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடிநீர் திருட்டு நடந்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து விட்டது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீர் மற்றும் குவாரிகளில் இருந்து நீர் திருடும் தனியார் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும். நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
திருச்செந்தூர் தோப்பூரை சேர்ந்த திருநங்கை விஜி மற்றும் சில திருநங்கைகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 28.8.2017 அன்று அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலரிடம் கொடுத்தோம். அந்த பணிக்கான நேர்முக தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அந்த தேர்வுக்கு எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. இதுகுறித்து நாங்கள் வழங்கிய கோரிக்கை மனுவிற்கு எந்த வித பதிலும் தராமல் திருநங்கைகளை இந்த பணிக்கு தேர்வு செய்ய முடியாது என கூறி எங்களை அனுப்பி விட்டனர். எங்களுக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மாதம்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்று வந்தது. கூட்டத்தில் சமூகநல ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் கலந்து கொண்டு ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், தேவைகள், குறைபாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் கடந்த பல மாதங்களாக இந்த கூட்டம் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே நோயாளர் நலச்சங்க கூட்டத்தை கூட்டுவதற்கு போர்க் கால அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து, கூட்டத்திற்கான தேதியை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெரு மேற்கு குருவி மேடு பகுதியில் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் 23 குடும்பங்கள் உள்ளன. ஆனால் எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாணவர்கள் நலன் கருதி எங்களுக்கு மின்இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், மியான்மர் நாட்டில் ரஹானே மாகாணத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் ஈவு இரக்கம் இன்றி செய்யும் சித்ரவதையையும், இன படுகொலையையும் மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும் மியான்மரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்பும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மியான்மர் பிரச்சினை முடியும் வரை இந்தியாவில் தங்கி இருக்கும் மியான்மர் முஸ்லிம்களை திருப்பி அனுப்பக்கூடாது என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர்.