மணல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கைமனு
மேல்மொணவூர் பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள்குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மணல்குவாரிக்கு எதிர்ப்பு
வேலூரை அடுத்த மேல்மொணவூர், மோட்டூர், ராமாபுரம் பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்கள் பகுதியில் மணல்குவாரி அமைக்க பணிகள் நடக்கிறது. இது பற்றி கேட்டால் எங்களை அவதூறாக பேசுகிறார்கள். இங்கு மணல் குவாரி அமைத்தால் கடப்பேரி மற்றும் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். கால்வாயை மூடி மணல் எடுத்து செல்ல பாதை அமைப்பதால் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்படும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது.
எனவே மணல்குவாரி அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுகுடிநீர் திட்டம்
அணைக்கட்டு தாலுகா கம்மாரப்பாளையம் கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், “எங்கள் கிராமத்திற்கு ஆற்றில் இருந்துவரும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகிறது. தரமில்லாத குழாய் பதிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்று அடிக்கடி நடக்கிறது. மேலும் விமானதளம் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து வரும் குடிநீர்குழாய் அமைக்கப்பட்டது. அந்த குழாயும் உடைந்து விடுகிறது. இதனால் எங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் கிடைப்பதில்லை.
ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தில் எங்கள் கிராமம் சேர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தண்ணீர் வந்ததில்லை. எனவே எங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
வேலூரை அடுத்த செம்பேடு கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் கிராமத்தில் 75 குடும்பத்தினர் சொந்த வீடின்றி வசித்துவருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.