நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம்: கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் அறிவித்ததால் வேப்பந்தட்டை அரசு கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை,
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறி கோஷமிட்டனர்.
விடுமுறை
இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையையடுத்து வகுப்பு நேரம் முடிந்ததால் மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து தங்களது வீட்டிற்கு சென்றனர். மேலும் இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடரும் என அறிவித்தனர். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவ-மாணவிகள் அறிவித்ததால் கல்லூரி முதல்வர் மணிமேகலை கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறையளித்து உத்தரவிட்டுள்ளார்.