பெரம்பலூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும்
பெரம்பலூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றார். மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கலையரசி உள்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிலர் கோஷமிட்டபடியே திரண்டு வந்து அளித்த மனுவில், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பகுதி மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை காரை பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இங்கு டாஸ்மாக் கடைகள் மீண்டும் வந்தால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். ஒருவேளை டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்களை திரட்டி கடை முன்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் சாலையோரமாக பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் திரண்டு வந்து அளித்த மனுவில், பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் சாலையோரத்தில் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
போக்குவரத்திற்கு இடையூறின்றி அப்பகுதியில் சற்று ஓரமாக கடை வைக்க அனுமதி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், முத்தரையர் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து முன்னுரிமை கொடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.