‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-11 22:30 GMT

திண்டிவனம்,

‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டனர்.

 பின்னர் அவர்கள் மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்