‘நீட்’ தேர்வுக்கு எதிராக அரசு பள்ளி மாணவர்களை போராட தூண்டிய 3 பேர் கைது

கோவையை அடுத்த வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடந்தது.

Update: 2017-09-11 23:00 GMT

கோவை,

கோவையை அடுத்த வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் வாசல் முன் நின்ற 3 பேர் பள்ளிக்கு சென்ற மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட வருமாறு அழைத்தனர்.

இதனால் மாணவ–மாணவிகள் சிலர் பள்ளிக்கு செல்லாமல் அதன் முன் உட்கார்ந்து ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்திய மாணவர்களை சமரசம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி விசாரணை நடத்தி மாணவர்களை போராட தூண்டிய அதே பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 44), தாமோதரன் (24), பிரபாகரன் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான வீரமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆவார். பிரபாகரன் திராவிடர் கழக பிரமுகர் என்பதும் தாமோதரன் புரட்சிகர மாணவர் முன்னணியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்