திண்டுக்கல்லில் சுவர் இடிந்து விழுந்து பெயிண்டர் சாவு

திண்டுக்கல்லில் பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெயிண்டர் சாவு நண்பர் படுகாயம்.

Update: 2017-09-10 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 21). பெயிண்டர். இவருடைய நண்பர் காளிதாஸ் (20). நேற்று இரவு 10.30 மணி அளவில் ஜெயக்குமாரின் வீட்டில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

 அப்போது, வீட்டின் ஒரு பகுதியில் இருந்த மண்சுவர் திடீரென இடிந்து அவர்களின் மேல் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பலியானார். படுகாயமடைந்த காளிதாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்