தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் விருதுநகரில் 13–ந் தேதி ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் 13–ந் தேதி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்,
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய போது நாளை மறுநாள்(புதன்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி விருதுநகர் அம்மன் கோவில் திடலில் காலை 10 மணியளவில் தி.மு.க., காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தி.மு.க. தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.