கடன் தொல்லையால் மளிகைகடைக்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் மளிகைகடைக்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சி பக்கமுள்ள மூலக்குறிச்சியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவரது மனைவி சுசீலா (35). இவர்கள் மூலக்குறிச்சியில் மளிகைகடை நடத்தி வந்தனர்.
சரவணன் அதே கிராமத்திற்கு உட்பட்ட ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் 4 வருடங்களுக்கு முன்பு ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக கடந்த 3½ வருடங்களாக வட்டி கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 3 மாதங்களாக சரவணன் ரூ.17 ஆயிரம் வட்டியை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி கடன் கொடுத்த விவசாயி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அந்த விவசாயி, மளிகை கடைக்காரர் சரவணனிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் சரவணனை திட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சரவணனின் மனைவி சுசீலா அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தருகிறாரே என்று மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. அன்று அவர் தம்மம்பட்டிக்கு சென்று விஷம் குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்து கிடந்த அவரை உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசீலா நேற்று முன்தினம் இறந்தார். இதுபற்றி சரவணன் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அனந்தலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.