மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு
மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிந்து உள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ.25-க்கும், பீன்ஸ் - ரூ.40-க்கும், கத்தரிக்காய் - ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகள் மூலம் காய்கறி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி தேவை காரணமாக காய்கறி விலை அதிகரித்தது. ஆனால் தொடர் மழை காரணமாக காய்கறி விலை குறைய தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.25-க்கு விற்பனை ஆகிறது. ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், தற்போது ரூ.40 வரை விற்பனை ஆகிறது. கத்தரிக்காய் ரூ.15 விலை சரிந்து, தற்போது ரூ.35-க்கு விற்பனை ஆகிறது. கேரட் விலை ரூ.20 குறைந்து, தற்போது ரூ.30-க்கு விற்பனை ஆகிறது. இதனைத்தவிர பெரும்பாலான காய்கறி ரூ.15 வரை விலை குறைந்து இருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பல்லாரி- ரூ.30, உருளைக்கிழங்கு- ரூ.18, கேரட்- ரூ.30, பீன்ஸ்- ரூ.40 வரை, நூக்கல்- ரூ.30, சவ்சவ்- ரூ.25, பீட்ரூட்- ரூ.20, முட்டைக்கோஸ்- ரூ.20, மிளகாய்- ரூ.35 வரை, இஞ்சி- ரூ.60 வரை, சேனைக்கிழங்கு- ரூ.30, சேப்பங்கிழங்கு- ரூ.35, கத்திரிக்காய்- ரூ.35 வரை, வெண்டைக்காய்- ரூ.15, அவரைக்காய்- ரூ.30, கோவைக் காய்- ரூ.20, கொத்தவரங்காய்- ரூ.30, பாகற்காய்(பன்னீர்)- ரூ.25, பெரிய பாகற்காய்- ரூ.30 வரை, முருங்கைக்காய்- ரூ.40 வரை, முள்ளங்கி- ரூ.15, வெள்ளரிக்காய்- ரூ.20, புடலங்காய்- ரூ.20 வரை, தக்காளி- ரூ.25, காலிபிளவர் (ஒன்று)- ரூ.25, பீர்க்கங்காய்- ரூ.30, சுரைக்காய்- ரூ.20, சாம்பார் வெங்காயம்- ரூ.80 முதல் ரூ.100 வரை, தேங்காய்- ரூ.25 வரை, வாழைக்காய்- ரூ.8 வரை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பிள் விலை அதிரடி சரிவு கிலோவுக்கு ரூ.40 வரை குறைந்தது
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி போலவே பழங்களின் விலையும் வெகுவாக குறைந்திருக்கிறது. பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
மழை காரணமாக எல்லா பழங்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து இறக்குமதி ஆகும் ‘சிம்லா’ ஆப்பிள் விலை வெகுவாக சரிந்து உள்ளது. விளைச்சல்-வரத்து அதிகரித்ததின் விளைவாக ரூ.160 வரை விற்பனையான சிம்லா ஆப்பிள், தற்போது ரூ.120-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் சீனா ஆப்பிளும் ரூ.40 வரை விலை குறைந்து இருக்கிறது.
பழங்களின் விலை நிலவரம் வருமாறு:-
வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.150, சீனா ஆப்பிள்- ரூ.160, சிம்லா ஆப்பிள் (இந்தியா) - 120, மாதுளை- ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.30, ஆரஞ்சு- ரூ.120, சப்போட்டா- ரூ.40, அன்னாசிபழம் (ஒன்று)- ரூ.40, கொய்யா- ரூ.40, வாழை (தார்)- ரூ.350 முதல் ரூ.400 வரை, தர்பீஸ்- ரூ.12 வரை, திராட்சை- ரூ.80 வரை.