சீனாவின் புதிய பிரம்மாண்டம்!

சீனாவில் உள்ள சர்வதேச கலாசார மற்றும் கலை மையம், பார்ப்போரை வியக்க வைக்கிறது.

Update: 2017-09-09 07:30 GMT
சீனாவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள சர்வதேச கலாசார மற்றும் கலை மையம், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது முடிவடைந்து திறப்புவிழா கண்டிருக்கிறது.

 இந்த மீக்ஸி லேக் சர்வதேச கலாசாரம் மற்றும் கலை மையம் கடந்த வாரம் முதல்முறையாக பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பரவி வருகின்றன.

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் உள்ள மீக்ஸி லேக் அருகில் இந்த கலாசார மற்றும் கலை மையம் உருவாகியிருக்கிறது.

சீனாவுக்கே உரிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் இந்த மையம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகாகவும், பார்ப்போரை வியக்க வைக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

இதில் பிரம்மாண்ட திரையரங்கு, சிறிய திரையரங்கு, கலை அருங்காட்சியம் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்