செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி மறியல்

செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2017-09-09 00:09 GMT

மதுராந்தகம்,

செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் சுற்று வட்டார பகுதிகளான சித்தாமூர், கடப்பாக்கம், சூனாம்பேடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு போதிய டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்தவர்கள் செய்யூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே சித்தாமூர்– செய்யூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். தகவல் அறிந்து செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்