தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் சந்தைமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் சந்தைமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே இந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.