சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச வை–பை சேவை
காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச வை–பை சேவை தொடக்க விழா நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச வை–பை சேவை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு இலவச வை–பை சேவையை தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், தென்னிந்திய ரிலையன்ஸ் தலைவர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.