எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கால்கோள் நடப்பட்டது 6 அமைச்சர்கள் பங்கேற்பு

சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சியில் 6 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Update: 2017-09-08 22:20 GMT
சேலம்,

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வருகிற 30-ந் தேதி மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடக்க உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் கால்கோள் விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்ட அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிப்பு பயிற்சிகளும், பல கோடிரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா, எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்படக்கண்காட்சி, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால், வரலாற்று சிறப்பு மிக்கவகையில் நடப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

கால்கோள் விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், எஸ்.ராஜா, பி.மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் சின்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் உதவி கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் சுந்தரபாண்டியன், ரவி, சேலம் மாவட்ட அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர் காதர்கான் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்