இளம்பெண் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல்
காரையூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காரையூர்,
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள வெள்ளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 30). இவரது மனைவி ராஜ குமாரி (22), இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜகுமாரி நேற்று மாலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் போலீசார் ராஜகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ராஜகுமாரியின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, நேற்று இரவு காரையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காரையூர் போலீசார் தண்டாயுதபாணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜகுமாரிக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.