புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்திட வேண்டும். அதுவரை இடைகால நிவாரணம் 20 சதவீதம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல் நாள் வட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
நேற்று 2-வது நாளாக நடந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல நீடாமங்கலத்தில் நேற்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீடாமங்கலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.