ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் 645 பேர் கைது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் நேற்று காலை கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் கீழ்பென்னாத்தூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் கி.அ.முருகன் தலைமையில் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் செல்வி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 220 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரையும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போளூரில் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் செய்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த 300 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு கைது செய்தார். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.
இதேபோல கலசபாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.