காஞ்சீபுரம், பொன்னேரியில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 393 பேர் கைது

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,

Update: 2017-09-07 23:40 GMT

காஞ்சீபுரம்,

ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 107 பெண்கள் உள்பட 193 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பொன்னேரியில் ஆர்.டி.ஓ. அலுவலக நுழைவுவாயில் முன்பு பொன்னேரி வட்டார போராட்ட குழுத்தலைவர் ஜெயகர், ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று திருவொற்றியூர்– பொன்னேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்