கோவை அருகே பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி உள்பட 5 பேர் நசுங்கி சாவு 18 பேர் படுகாயம்
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ளது சோமனூர். இங்குள்ள மேம்பாலம் அருகே சோமனூர் பேரூராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது.
கோவை,
கோவை, அன்னூர், திருப்பூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையம் கடந்த 1998-ம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோமனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பஸ் நிலைய மேற்கூரையின் மேல்பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால், மேற்கூரை முழுவதும் ஈரப்பதத்துடன், நிலைப்பு தன்மையற்ற நிலையில் காணப்பட்டது. அதை பயணிகள் அறியாமல் அந்த பஸ்நிலையத்துக்குள் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் 1½ மணியளவில் இந்த பஸ்நிலையத்துக்குள் திருப்பூரில் இருந்து சோமனூருக்கு இயக்கப்படும் ‘5 ஏ‘ என்ற அரசு டவுன் பஸ்சும், கோவை உக்கடத்தில் இருந்து சோமனூருக்கு இயக்கப்படும் ‘90 ஏ‘ என்ற அரசு டவுன் பஸ்சும் நின்றிருந்தன. அதில் பயணிகள் சிலர் இருந்தனர்.
அதில், 90 ஏ பஸ்சை, டிரைவரான நெகமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 41) என்பவர் ஸ்டார்ட் செய்தார். அந்த பஸ்சின் கண்டக்டரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவக்குமார் (43) என்பவர் பஸ்சின் பின்னால் நின்றிருந்தார்.
அப்போது திடீரென்று பஸ்நிலைய மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அதைப்பார்த்த சிவக் குமார், பஸ்நிலையத்துக்குள் இருக்கும் பயணிகள் அனைவரும் வெளியே ஓடி வாருங்கள் என்று கத்தினார். உடனே அங்கு இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் 200 அடி நீளமுள்ள பஸ்நிலைய மேற்கூரை சீட்டுக்கட்டு விழுவதுபோன்று மொத்தமாக இடிந்து கீழே விழுந்து, அங்கு நின்றிருந்தவர்களை அமுக்கியது. இதில் கண்டக்டர் சிவக்குமார் உள்பட பயணிகள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘ என்று அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு நின்றிருந்தவர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தார்கள்.
இதன் காரணமாக அந்த பஸ் நிலையம் முழுவதும் கட்டிட இடிபாடுகள் நிறைந்து காணப்பட்டது.ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்கூரையில் உள்ள தூண்களும் இடிந்து விழுந்ததால் அதை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.
உடனே பொக்லைன் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, அவற்றை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியபடி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர் களை மீட்டனர்.
பிறகு கோவை, திருப்பூர், அவினாசி, சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்சுகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களும் அங்கு வரவழைக்கப்பட்டன.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் கோவை, சூலூர், அவினாசி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதில் இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சிவக்குமார் (43), அரசு பஸ் கண்டக்டர்.
2. தாரணி (20), தந்தை பெயர் சின்னசாமி. இச்சிப்பட்டி, சோமனூர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
3. ஈஸ்வரி (40). கணவர் பெயர் ராமலிங்கம், அய்யம்பாளையம், பல்லடம்.
4. துளசி (40), கணவர் பெயர் பழனிசாமி. குளத்துப்பாளையம், சூலூர். மற்றும் 70 வயதான முதியவர் அடையாளம் தெரியவில்லை.
படுகாயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. விஜயா (45), கணவர் பெயர் பழனிசாமி, பள்ளிபாளையம், சோமனூர்.
2. வளர்மதி (44). பீளமேடு, கோவை.
3. முரளி (44) சோமனூர்.
4. சவுடேஸ்வரி பழனி (49), சோமனூர்.
5. நந்தகுமார் (43), செம்மாண்டம்பாளையம்.
6. கமலம் (66), பீளமேடு, கோவை.
7. லதா (20), தந்தை பெயர் நாராயணசாமி, தேவராயம்பாளையம்.
8. அய்யாவு (80), அய்யன்பாளையம் காலனி.
9. மல்லப்ப கவுண்டர் (90).
10. ஆனந்தகுமார் (43), செம்மாண்டம்பாளையம்.
11. சண்முகம் (41), நெகமம், ‘90 ஏ‘ அரசு பஸ் டிரைவர்.
12. ராஜாராம் (38), ‘5 ஏ‘ அரசு பஸ் டிரைவர்.
13. லீமா ரோஸ் (70), சோமனூர்.
மீதமுள்ள 5 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், கோவை ஆர்.டி.ஓ. மதுராந்தகி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
பின்னர் கலெக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டை முதல்-அமைச்சர் அறிவிப்பார். மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்‘ என்றார்.
மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நா.கார்த்திக் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.