வேன் மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி விபத்து மீட்புப்பணியை பார்வையிட்ட போது நேர்ந்த துயரம்
நெல்லை அருகே விபத்து மீட்புப்பணியை பார்வையிட சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேன் மோதி பலியானார்.
நெல்லை,
திருச்சியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 33) ஓட்டி வந்தார். அந்த லாரி நேற்று அதிகாலை நெல்லையை அடுத்த தாழையூத்து நான்கு வழி சாலையில் வந்து கொண்டு இருந்தது. குறிச்சிகுளம் பகுதியில் டிரைவர் சதீஷ்குமார் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு இயற்கை உபாதையை கழிப்பதற்காக இறங்கி சென்றார்.
அப்போது அந்த வழியாக ஒரு தண்ணீர் லாரி வந்தது. அந்த லாரியை அம்பையை அடுத்த கீழ ஆம்பூரை சேர்ந்த கணேசன்(36) ஓட்டி வந்தார். எதிர்பாராதவிதமாக தண்ணீர் லாரி, சாலையோரம் நின்று கொண்டு இருந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது மோதியது. இதில் கியாஸ் சிலிண்டர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா(30) தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கவிழ்ந்து கிடந்த சிலிண்டர் லாரியை மீட்க பாளையங்கோட்டையில் இருந்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனத்தை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த பட்டுமாரி(40) ஓட்டி வந்தார்.
வாகனம் மூலம் மீட்பு பணி நடந்து கொண்டு இருந்தது. அதனை சாலை ஓரமாக நின்று சப்-இன்ஸ்பெக்டர் அகிலா கவனித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக் கொண்டு மதுரையில் இருந்து ஒரு வேன் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
அந்த வேன் கண்இமைக்கும் நேரத்தில் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு இருந்த அகிலா மற்றும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் அகிலா ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பலியானார். மேலும் அங்கு நின்று கொண்டு இருந்த நாமக்கல் எல்லைக்கவுண்டன்பட்டியை சேர்ந்த சண்முகம்(35), திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த சரவணன்(35), மீட்பு வாகன டிரைவர் பட்டுமாரி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்துக்கு காரணமான பழங்களை ஏற்றி வந்த வேன் டிரைவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த மாதவனை(50) கைது செய்தனர். பின்னர் பலியான சப்-இன்ஸ்பெக்டர் அகிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
விபத்தில் பலியான அகிலாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணலிவிளை ஆகும். இவருடைய கணவர் கார்த்திக் தென்காசியை சேர்ந்தவர். இவர்கள் இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் தென்காசியில் தங்கி, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
சப்-இன்ஸ்பெக்டர் அகிலா, தாழையூத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே சுரண்டை, விக்கிரமசிங்புரம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.