புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் சாலை மறியல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார்் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், தமிழரசன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில செயலாளர் குருசந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். 7-வது ஊதியக்குழுவின் குறைகளை களைந்து, ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்த ஓய்வூதியம் ரூ.3,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடந்தது.
75 பேர் கைது
இதில் மாவட்ட துணைத்தலைவர் பெத்தபெருமாள், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணை செயலாளர்கள் தியாகராஜன், ராமசாமி, ஞானசேகரன், சீதாலெட்சுமி, உஷாராணி, மாவட்ட பொருளாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட தணிக்கையாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.