11 இடங்களில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சாலை மறியல் 1,149 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 1,149 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் போன்ற முறைகளை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் தாலுகா அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. இதன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கோவிந்தன், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் முருகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் அருகே வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஓய்வூதியர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 74 பெண்கள் உள்பட 206 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோட்டை மைதானம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கோவிந்தன் நிருபர்களிடம் கூறும் போது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உடனடியாக எங்கள் அமைப்பின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்“ என்றார்.
ஏராளமான ஆசிரியர்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி வாழப்பாடி, ஏத்தாப்பூர் ஆகிய 10 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் நடந்த சாலை மறியலில் 1,149 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.