கத்திவாக்கத்தில் ரெயிலில் அடிபட்டு அனல்மின் நிலைய ஊழியர் பலி

எண்ணூரில் உள்ள அனல்மின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் முனுசாமி(வயது 52). இவர், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.

Update: 2017-09-07 23:15 GMT
திருவொற்றியூர்,

நேற்று காலை அவர் பணிக்கு செல்வதற்காக கத்திவாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு முனுசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பலியான முனுசாமிக்கு வளர்மதி என்ற மனைவியும், ஒரு மகனும், 2
மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்