மறைக்கப்பட்ட விண்வெளி ரகசியம்

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், ரஷியாவின் வாலண்டீனா தெரெஷ்கோவா.

Update: 2017-09-08 05:30 GMT
1963–ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று 3 நாட்கள் தங்கியிருந்து, வெற்றிகரமாகத் திரும்பியவர் வாலண்டீனா தெரெஷ்கோவா. சமீபத்தில் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் விண்வெளிக் காட்சிக் கூடத்தை அவர் திறந்து வைத்தார். 

“சாதாரண பெண்ணான எனக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பூமியில் இருந்து கிளம்பி, 144 மைல்கள் பயணித்த பிறகுதான் பல் துலக்கும் பேஸ்ட் எடுத்துவரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அன்றைய ரஷிய அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியுமே தவிர, அவற்றை வெளியே சொல்ல அனுமதி இல்லை. 30 ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் பாதுகாத்து வந்தேன். தற்போதுதான் வெளியுலகத்துக்குச் சொல்லியிருக்கிறேன்’’ என்றார் வாலண்டீனா. 

அருங்காட்சியகத்தின் இயக்குனர், “இருபதாம் நூற்றாண்டில் ரஷியர்கள் நிகழ்த்திய விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக முக்கியமானவை. அவர்களின் பங்களிப்பையும், சாதனைகளையும் கவுரவிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.

மேலும் செய்திகள்