தாசில்தாருக்கு கொலை மிரட்டல்: ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

தாசில்தாருக்கு கொலை மிரட்டல்: ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

Update: 2017-09-06 22:15 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வஅழகன் (வயது67). இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற செல்வஅழகன், அங்கு பணியில் இருந்த தாசில்தார் ரவிச்சந்திரனிடம், ஒரு பெண்ணின் பெயரை கூறி அந்த பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்காதது ஏன்? என கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது செல்வஅழகன், தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தாசில்தார் ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வஅழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்