வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கியது பக்தர்கள் அச்சம்

வேளாங்கண்ணியில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் அச்சம் அடைந்தார்.

Update: 2017-09-05 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் பேராலயத்தில் தேர் பவனி நடைபெற்று வருகிறது. ஆண்டு திருவிழாவையொட்டி பெரிய தேர் பவனி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம்.

கடல் உள்வாங்கியது

இந்த நிலையில் நேற்று காலை வேளாங்கண்ணியில் திடீரென கடல் சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என்று கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு வந்தது. 

மேலும் செய்திகள்