கட்சி பதவியில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டம்

கட்சி பதவியில் இருந்து அமைச்சர் சி.வி. சண்முகம் நீக்கப்பட்டதை கண்டித்து திண்டிவனம் பகுதியில் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2017-09-05 23:30 GMT

திண்டிவனம்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட (அ.தி.மு.க. அம்மா)அணி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேற்று முன்தினம் நீக்கி கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டார். இதை கண்டித்து வுன்சிலர்கள் முகமது‌ஷபி, சுப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி:ண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுப்பு ரெட்டியார், ரங்கநாதன், ஜெகதீஷ், பன்னீர், மணி, ஏழுமலை, ராஜேந்திரன், அண்ணாதுரை, தங்கமணி, பாலகிருஷ்ணன், சிவா, வெங்கடேஷ், டில்லி, அரங்கநாதன், சரவணன், சிங்காரவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வல்லம் அருகே நாட்டார்மங்கலம் கூட்டுரோட்டில் ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி தலைமையில் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

 இதில் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பரிமளா பன்னீர், முன்னாள் கவுன்சிலர் ரவி, ஒன்றிய நிர்வாகிகள் கோபால், மனோகரன், இளைஞர் பாசறை பாலமுருகன், செந்தில், குமார், ஆறுமுகம், உஷாராணி, செல்வம், கிருஷ்ணன், பாரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேல்மலையனூரில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்கப்ப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் பாலா, கிளை செயலாளர்கள் முனியப்பன், துரைக்கண்ணு, விஜயன், முன்னாள் கவுன்சிலர்கள் முகமது‌ஷபி, சுப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன் தலைமையில் கூட்டேரிப்பட்டில் டி.டி.வி.தினரகன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் புலியனூர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், இளைஞரணி நிர்வாகி நாராயணன், பேரவை நிர்வாகி சீனுவாசன், ஊராட்சி செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் ராஜாராம், பதி, வக்கீல் பாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்