ஆனந்த சதுர்த்தி விழா இன்று கோலாகலம் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம்
மும்பையில் 11 நாட்கள் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா இன்று ஆனந்த சதுர்த்தி விழாவுடன் நிறைவடைகிறது.
மும்பையில் இன்று நடைபெறும் ஆனந்த சதுர்த்தி விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது. 120 இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் 11 நாட்கள் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா இன்று ஆனந்த சதுர்த்தி விழாவுடன் நிறைவடைகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மும்பையில் வீதிகள் தோறும் சர்வஜனிக் மண்டல்கள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. வீடுகளிலும் பொதுமக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
விநாயகர் சிலைகள் மற்றும் கவுரி சிலைகளை பக்தர்கள் 1½, 3, 5 மற்றும் 7 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நீர்நிலைகளில் கரைத்தனர்.
சர்வஜனிக் மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரும்பாலான விநாயகர் சிலைகள் ஆனந்த சதுர்த்தியன்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 11 நாட்கள் பூஜைகள் நிறைவடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சர்வஜனிக் மண்டல்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளன. இதுபோல மும்பையில் பிரசித்தி பெற்ற லாக்பாக் ராஜா விநாயகர் சிலையும் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.
இதற்காக மும்பை மாநகராட்சி சார்பில் கடற்கரை, குளம், செயற்கை குளங்கள் உள்ளிட்ட 120 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நீர்நிலைகளில் இன்றைய தினம் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும் என்பதால் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
9 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபடுகிறார்கள். அதிக அளவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் கிர்காவ் கடற்கரை, சிவாஜிபார்க், ஜூகு கடற்கரை, வெர்சோவா கடற்கரைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மொத்தம் 25 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, பெண்களிடம் அத்துமீறுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க உள்ளனர். கிர்காவ், சிவாஜிபார்க், ஜூகு கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் வரும் முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பிரதான இடங்களில் கலவர தடுப்பு படையினர், மாநில ரிசர்வ் படையினர், மும்பை போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் சென்று போலீஸ் கமிஷனர் தத்தாராய் பட்சல்கிகர் ஆய்வு செய்தார்.
கடற்கரைகளில் பக்தர்கள் மற்றும் போக்குவரத்துக்களை சீர்படுத்த மற்றும் ஒழுங்குப்படுத்துவதற்கு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், சாரண, சாரணீயர் படையினர், ஊர்க்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கிர்காவ், சிவாஜிபார்க், வெர்சோவா, ஜூகு உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்லும் வகையில் மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான கிரேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக எடுத்து வரும் வாகனங்கள் கடற்கரை மணல்களில் பதியாத வகையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் முக்கிய இடங்களில் மணல் மீது இரும்பு தகடுகள் போடப்பட்டுள்ளது.
இதுதவிர கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுகள், லேசான காயம் அடைபவர்களுக்கு சிகிச்சையளிக்க முதல் உதவி சிகிச்சை மையங்கள், கடலில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கு மாநகராட்சி சார்பில் உயிர் காக்கும் வீரர்களும், தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பக்தர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.