நிலமோசடி வழக்கில் ஏக்நாத் கட்சே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன்ன?

பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. இவர்மீது சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா என்பவர் நில மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.

Update: 2017-09-04 23:36 GMT

மும்பை,

பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. இவர்மீது சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா என்பவர் நில மோசடி வழக்கு தாக்கல் செய்தார். மேலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதால் அவர் தன் மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.

ஆனால் அஞ்சலி தமானியா தொடர்ந்த வழக்கில் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் ஏக்நாத் கட்சே மீதான நிலமோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவேண்டும் அல்லது நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ ஏக்நாத் கட்சே மீது மிக தீவிரமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு சரியான நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் கோர்ட்டை நாடியுள்ளார்.

எனவே ஏக்நாத் கட்சே வழக்கில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்