மாணவி அனிதா தற்கொலை: சேலத்தில் நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா தற்கொலை எதிரொலியாக சேலத்தில் நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம்,
‘நீட்‘ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா கடந்த 1-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவரது மரணத்திற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே என்று தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சேலத்தில் நேற்று 3-வது நாளாகவும் போராட்டம் நடந்தது. கலாம் நண்பர்கள் அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலாம் நண்பர்கள் அமைப்பு சார்பில் காளிதாஸ், சக்தி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும், ‘நீட்‘ தேர்வுக்கு தமிழகத்திற்கு நிரந்தர விலக்கினை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும், தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
இதுபோல மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய-மாநில அரசுகள்தான் பொறுப்பு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மாணவர் இளைஞர்கள் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் கண்ணன், மாரியப்பன், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரபாகரன், வடிவேல், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சமூகநல மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 40 அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிற 8-ந் தேதி மாணவி அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு மாபெரும் ஊர்வலமும், தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப் படும் என்று தெரிவிக்கப் பட்டது.