“நீட்” தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நார்த்தாமலை அருகே “நீட்” தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 22:15 GMT
“நீட்” தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி
பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நார்த்தாமலை,

“நீட்” தேர்வு காரணமாக தனது மருத்துவபடிப்பு கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 தினங்கள் விடுமுறைக்கு பின்பு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடி கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், “நீட்” தேர்வு பாதிப்பால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உருவ படத்தை கையில் ஏந்தி கொண்டு மாணவியின் மரணத்திற்கும் நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்