திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-09-04 22:45 GMT
திருவள்ளூர்,

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடபட்டோருக்கான உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்