தாராவி சுந்தரவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது

தாராவி சுந்தரவிநாயகர் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Update: 2017-09-03 22:52 GMT

மும்பை,

தாராவி சுந்தரவிநாயகர் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பில் தாராவி தேவர் நகரில் உள்ள சுந்தரவிநாயகர் கோவிலில் 61–வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 25–ந் தேதி முதல் தினமும் இரவு கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், விளக்கு பூஜை, மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடந்தன.

இதில், நேற்று முன்தினம் கடந்த ஆண்டு 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கும் விழா நடந்தது.

மாணவர்களுக்கு பதக்கம்

விழாவிற்கு தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். சுந்தர விநாயகர் கோவில் தர்மகர்த்தா சுப்பையா தேவர் முன்னிலை வகித்தார். மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், ராகுல் செவாலே எம்.பி., கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இதையடுத்து 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவர்களுக்கு அமரர் பி.எஸ்.கே.டிரஸ்ட் சார்பில் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கோவில் முன்னாள் தர்மகர்த்தா பட்டத்தேவர், தருண் பாரத் சேவா சங்க தலைவர் ராஜேந்திரன் சுவாமி, அங்கப்பத்தேவர், சண்முகையா பாண்டியன், பி.வி.பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் ராஜூ சூரியவன்சி மற்றும் கோவில் நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள் கலந்துகொண்டனர். கே.கே.பாண்டியன் மற்றும் கே.மலையாண்டி பாண்டியன் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

மேலும் செய்திகள்