சொகுசு கார் மோதி 4 வயது சிறுமி பலி தாயின் கண் முன்னே நேர்ந்த சோகம்
சென்னை மத்திய கைலாஷ் அருகே நடந்த விபத்தில் சொகுசு கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்தாள். தாயின் கண் முன்னே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை,

அமெரிக்காவில்...
சென்னை தரமணி அருகே உள்ள களிகுன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ரமலா(வயது 29). இந்த தம்பதிகளுக்கு பிலிண்டா(4) என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. பாலகிருஷ்ணன் தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் ரமலாவும், அவரது குழந்தை பிலிண்டாவும் தனியாக வசித்து வந்தனர்.
சிறுமி உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று ரமலா, திருவான்மியூரில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக, மகள் பிலிண்டாவை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மத்திய கைலாஷ் அருகே உள்ள சிக்னலை கடக்கும் போது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரமலா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் ரமலா மற்றும் அவரது மகள் பிலிண்டா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஆனால் அருகில் உள்ளவர்கள் யாரும் உதவ முன் வராததால், சிறுமி பிலிண்டா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
சொகுசு கார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமலாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பிலிண்டாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை வைத்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு கார் யாருடையது? காரை ஓட்டி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.