நீட் தேர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்–அமைச்சர் கூட்ட வேண்டும்
நீட் தேர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்–அமைச்சர் கூட்ட வேண்டும் என திவாகரன் கூறினார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திவாகரன் கும்பகோணம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
தமிழக எம்.எல்.ஏ.ககளிடம் பேரம் பேசுவதற்காக அவசரமாக முதல்–அமைச்சர் கூட்டம் கூட்டுகிறார். அந்த எம்.எல்.ஏ.க்கள் அங்கு செல்வதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக நினைக்க கூடாது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் தேர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை, தமிழக முதல்–அமைச்சர் கூட்ட வேண்டும். அதிவிரைவில் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். நீட் தேர்விற்காக தி.மு.க. தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் எங்களுக்கு அழைப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ரெங்கசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:–
எங்களை ஒரு சில துன்புறுத்துகின்றனர். ஆதலால் ஒரு சில முடிவுகளை எடுப்பதற்காக நாங்கள் அனைவரும் சொந்த செலவில் புதுச்சேரியில் உள்ள விடுதிக்கு சென்றோம் என கூறினார்.