‘நீட்’ தேர்வு விவகாரம் தொடர்பாக ‘‘தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள்’’ திவாகரன் பேட்டி

‘நீட்’ தேர்வு விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் கூறினார்.

Update: 2017-09-04 00:00 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்வு இந்த ஆண்டு ரத்து என மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் அணி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் வரை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

எங்கள் அணிக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 8 அமைச்சர்கள் 2 அணியும் ஒன்று சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 32 மாவட்டங்களும் எங்கள் அணியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களாக இருப்பதால் எங்கள் அணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியவில்லை.

தற்போது உள்ள தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்து தனபால் தலைமையில் புதிய ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்