உஷாரய்யா உஷாரு..
அவர்கள் இருவரும் நெருக்கமான தோழிகள். அருகருகே உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள். அழகானவர்கள். ஒருத்தி உடல்வாகுக்கு ஏற்ற உயரம் கொண்டவள். இன்னொருத்தி சற்று குள்ளமானவள்.
அவர்கள் இருவரும் நெருக்கமான தோழிகள். அருகருகே உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள். அழகானவர்கள். ஒருத்தி உடல்வாகுக்கு ஏற்ற உயரம் கொண்டவள். இன்னொருத்தி சற்று குள்ளமானவள். பள்ளி இறுதிப்படிப்பு வரை ஒன்றாக படித்த அவர்கள், பிரபலமான கல்லூரி ஒன்றிலும் ஒன்றாக சேர்ந்தார்கள். ஆனால் வெவ்வேறு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார்கள். உயரமான தோழி நவீன தொழில்நுட்ப பாடப்பிரிவு ஒன்றை தேர்ந்தெடுத்திருந்தாள்.
இருவரும் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்துவைத்தபோது குள்ளமான தோழி, இறுதி ஆண்டு பயிலும் மாணவனோடு காதல்வசப்பட்டாள். ஆழமாகத் தெரிந்த அவர்கள் காதலுக்கு, உயரமான தோழியும் அவ்வப்போது உதவி செய்து வந்தாள். வீட்டுக்குத் தெரியாத அளவுக்கு அவர்கள் காதல் ரகசியமாக வளர்ந்து கொண்டிருந்தது.
காதலனான அந்த மாணவன் நன்றாக படிக்கக்கூடியவன். படிப்பு முடிந்ததும் அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைகிடைத்தது. தூரத்தில் உள்ள பெருநகரம் ஒன்றில் அமைந்திருக்கும் நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்தான். அந்த நிலையிலும் அவர்கள் செல்போனில் காதலை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். அவளது படிப்பு முடிந்ததும், காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்தி, திருமணத்திற்கு சம்மதம் கேட்கவேண்டும் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் உயரமான தோழி வெளி நிறுவனம் ஒன்றில் 6 மாதங்கள் தனது ப்ராஜெக்ட்டுக்காக பணியாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ‘அதற்கு தகுதியான நிறுவனத்தை கண்டறிவதற்காக உனது காதலனை உதவி செய்யச்சொல்’ என்று அவள் தனது தோழியிடம் கேட்டாள்.
அவளும் காதலனிடம் கூற அவன், தான் வேலைபார்க்கும் ஊரிலே தனது நிறுவனத்தின் அருகிலேயே அவளுக்காக ஒரு மையத்தை தேடிப்பிடித்தான். அங்கே அவளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தான். உயரமானவளும், தனது தோழிக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கு சென்று ப்ராஜெக்ட்டை தொடர்ந்தாள்.
நாட்கள் செல்லச்செல்ல காதலன், தனது காதலியான மாணவியிடம் செல்போனில் பேசுவது குறைந்தது. அவளாக போன் செய்து காரணம் கேட்டபோது, ‘வேலையில் பிசியாக இருக்கிறேன். வெளிநாட்டிற்கும் போக வேண்டியதிருக்கிறது’ என்றான். காலப்போக்கில் அவளது போன் அழைப்பையும் புறக்கணித்தான்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தனது உயரமான தோழிக்கு போன் செய்து, ‘காதலன் பேச மறுக் கிறான். அவனிடம் சென்று, என்னிடம் பேசும்படி சொல்’ என்றாள். அதற்கு அவள், ‘அவன் தற்போது எங்கிருக்கிறான் என்றே தெரியாது. தேடிப்பிடித்து அவனிடம் விஷயத்தை கூறிவிட்டு, உன்னிடம் பேசுகிறேன்’ என்றாள்.
இரண்டு வாரங்கள் கழித்து, ‘அலுவலகத்திற்கு சென்று பார்த்தேன். அவன் புதிய ப்ராஜெக்ட் ஒன்றிற்காக வெளிநாடு போய்விட்டான். அவன் உன் உண்மையான காதலை மதிக்கத் தெரியாதவன். ஏமாற்றுக்காரன். உன்னை வேண்டும் என்றே உதாசீனப்படுத்துகிறான். அதனால் அவனை மறந்துவிடு’ என்று ஆலோசனை சொன்னாள். அதை கேட்டு கண்ணீர் விட்ட அவளுக்கு போனிலே ஆறுதலும் சொன்னாள்.
அவள் தனது ப்ராஜெக்ட்டை முடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பினாள். ஆனால் முன்பு போல் தனது தோழியிடம் நெருக்கம் காட்டவில்லை. பேசுவதையும் படிப்படியாக குறைத்தாள். அது பற்றி குள்ளத் தோழி கேட்டபோது, ‘என்னை பார்த்தாலே உனக்கு உன் காதலன் நினைவுதான் வரும். அவனைப் பற்றியே என்னிடம் பேசி அழுகிறாய். அதனால்தான் உன்னிடம் பேசுவதை தவிர்க்கிறேன்’ என்றாள்.
அவள் காதலனை மறக்க முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த நிலையிலே அவர்களது கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றது. தோழிகள் இருவரும் பிரிந்தனர்.
அடுத்த சில மாதங்களில் அந்த உயரமான தோழிக்கு திருமணம் பேசி முடித்தார்கள். கல்யாண பத்திரிகை ரெடியானது. அவள் தனக்கு திருமணம் நடப்பது பற்றி குள்ளமான தோழியிடம் சொல்லவே இல்லை. திருமண பத்திரிகையும் அனுப்பவில்லை. ஏன்என்றால் கல்யாணப் பத்திரிகையில் அவளது கணவனாக இடம் பெற்றிருந்தவன், அந்த குள்ள தோழியின் முன்னாள் காதலன்!
தோழியின் உதவியோடு ப்ராஜெக்ட் செய்ய செல்கிறவர்கள், தோழியின் காதலனையே ‘பிராக்கெட்’ போட்டு விடுவது இப்போது ஆங்காங்கே அரங்கேறுகிறது!
- உஷாரு வரும்.